/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு சேட் மருத்துவமனைக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் 'ஆம்புலன்ஸ்'
/
அரசு சேட் மருத்துவமனைக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் 'ஆம்புலன்ஸ்'
அரசு சேட் மருத்துவமனைக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் 'ஆம்புலன்ஸ்'
அரசு சேட் மருத்துவமனைக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் 'ஆம்புலன்ஸ்'
ADDED : டிச 20, 2024 10:38 PM

ஊட்டி; ஊட்டி அரசு சேட் மகப்பேறு அரசு மருத்துவமனையில், தனியார் பங்களிப்புடன் பல்வேறு மருத்துவ மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஊட்டி இன்னர் வீல் கிளப் சார்பில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆம்புலன்ஸ் நேற்று மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவுக்கு, ஊட்டி இன்னர் வீல் கிளப் தலைவர் தெல்மா நேதாஜி தலைமை வகித்தார். அரசு மருத்துவ கல்லுாரி டீன் கீதாஞ்சலி, ஆம்புலன்ஸ் இயக்கத்தை துவக்கி வைத்தார்.
இன்னர் வீல்கிளப் நிர்வாகிகள் கூறுகையில்,'எங்கள் சங்கத்துக்கு புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள சுனிதா பாலசுப்பிரமணியம் பரிந்துரை பேரில், ரிஷி பட்நாகர் என்பவர், 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். அந்த நிதியிலிருந்து, ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்,'எக்கோ கார்டியோகிராம்' என்ற நவீன கருவியையும், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு இவர் ஏற்கனவே வழங்கி உள்ளார்,' என்றனர்.