/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
டயர் பஞ்சரான அரசு பஸ்; சாலையில் சிரமப்பட்ட பயணிகள்
/
டயர் பஞ்சரான அரசு பஸ்; சாலையில் சிரமப்பட்ட பயணிகள்
டயர் பஞ்சரான அரசு பஸ்; சாலையில் சிரமப்பட்ட பயணிகள்
டயர் பஞ்சரான அரசு பஸ்; சாலையில் சிரமப்பட்ட பயணிகள்
ADDED : ஜூலை 13, 2025 08:27 PM

குன்னுார்; குன்னுார்-- ஊட்டி மலைப்பாதையில் டயர் பஞ்சராகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.
ஊட்டி அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த அரசு பஸ், கோவையில் இருந்து குண்டல்பேட் செல்ல, குன்னுார்- ஊட்டி சாலையில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. பாய்ஸ் கம்பெனி அருகே டயர் பஞ்சர் ஆனது.
ஏற்கனவே, குன்னூர் ஊட்டி இடையே பஸ்கள் இயக்காததால் கூட்ட நெரிசலில் பயணம் மேற்கொண்ட பயணிகள் இறக்கி விடப்பட்டு மாற்று வசதிக்காக காத்திருந்தனர். அப்போது, வந்த சேலம் ஊட்டி அரசு பஸ்சில், இருக்கைகள் காலி இருந்தும் பயணிகளை ஏற்ற மறுக்கப்பட்டது.
இதனால், அதன் பின் வந்த மற்றொரு பஸ்சில் பயணிகள் ஏற்றி விடப்பட்டனர். மாவட்டத்தில் இயக்கப்படும் பஸ்கள் அடிக்கடி பழுதடைந்து நிற்பதும் டயர் பஞ்சரா வதாலும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.