/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானைகள் வந்து செல்லும் பகுதியில் குப்பை கழிவு
/
யானைகள் வந்து செல்லும் பகுதியில் குப்பை கழிவு
ADDED : அக் 18, 2024 09:58 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே ராக்வுட் பகுதியில் யானைகள் வந்து செல்லும் பகுதியில் குப்பை கழிவுகள் நிறைந்துள்ளது.
பந்தலுார் அருகே ராக்வுட், கரியசோலை உள்ளிட்ட பகுதிகள், அதிகளவில் யானைகள்வந்து செல்லும் பகுதியாக உள்ளன. இந்த பகுதிகளில் நெலாக்கோட்டை ஊராட்சி மூலம் சாலை யோரங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டி எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், தொழிலாளர்கள் குப்பை கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை தொட்டிகளில் போடுகின்றனர்.
குப்பை தொட்டிகள் அடிபாகங்கள் உடைந்து காணப்படும் நிலையில், குப்பை சாலைகளில் சிதறி கிடக்கிறது. இந்த வழியாக வந்து செல்லும் யானை உள்ளிட்ட வன விலங்குகள் கழிவுகளை உட்கொள்ளும் நிலையில், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
எனவே, குப்பை தொட்டிகளில் நிறைந்துள்ள மற்றும் வெளியில் சிதறி கிடக்கும் குப்பையை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

