/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சித்தேஸ்வரர் கோவில் நன்னீராட்டு விழா
/
சித்தேஸ்வரர் கோவில் நன்னீராட்டு விழா
ADDED : பிப் 20, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: குன்னுார் ஸ்டேன்லி பார்க்கில் சிவகாமி சுந்தரி உடனமர் நடராஜ பெருமாள், சித்தேஸ்வரர் , தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகர், பாண்டி முனீஸ்வரர், நாகராஜர் மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது.
திருக்கண் மலர்தல் வழிபாடு, கரிகோல வழிபாடு, முதல் கால யாக வேள்வி, அஷ்டபந்தனம், நடந்தது.
நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, கருவி குட வழிபாடு, 2ம் கால யாக வேள்வி, விமானம் மற்றும் மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு, சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், அர்ச்சனை, திருமுறை பாராயணம் நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் பாலமுரளி, கிராம மக்கள் செய்தனர்.

