/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் வனத்துறையினர் நேரடி ஆய்வு
/
கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் வனத்துறையினர் நேரடி ஆய்வு
கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் வனத்துறையினர் நேரடி ஆய்வு
கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் வனத்துறையினர் நேரடி ஆய்வு
ADDED : டிச 19, 2025 05:23 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே புஞ்சை வயல் கிராமத்தில், சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புஞ்சைவயல் கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில், 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதனை ஒட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஐ.டி.ஐ., அரசு நடுநிலைப்பள்ளி ஆகியவையும் செயல்பட்டு வருகின்றன.
இதன் வழியாக உப்பட்டி கொளப்பள்ளி சாலை அமைந்துள்ளதால், மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில், கிராமத்திற்கு மத்தியில் உள்ள தேயிலை தோட்டத்தில், இரவு மற்றும் பகல் நேரங்களில் சிறுத்தை ஒன்று நாள்தோறும் உலா வருவதை, கிராம மக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, வனச்சரகர் ரவி மேற்பார்வையில், வனவர் ஆனந்த் மற்றும் வனக்குழுவினர், இப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தையின் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். அத்துடன், 'பொதுமக்கள் தனியாக நடந்து செல்ல வேண்டாம்; பள்ளிச் செல்லும் மாணவர்கள் பெற்றோர் துணையுடன் செல்ல வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, அந்த பகுதியில் வனக்குழுவினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

