sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/குட்டிகளுக்கு உணவு உட்கொள்ளும் வழிமுறைகள்

குட்டிகளுக்கு உணவு உட்கொள்ளும் வழிமுறைகள்

குட்டிகளுக்கு உணவு உட்கொள்ளும் வழிமுறைகள்


ADDED : பிப் 04, 2024 10:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2024 10:53 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்;பந்தலுாரில் யானை குட்டிகளுக்கு உணவு உட்கொள்ளும் வழிமுறைகளை தாய் யானை கற்று கொடுத்தது.

பந்தலுார் சுற்று வட்டார பகுதி வனங்களில் அதிக அளவில் யானைகள் முகாமிட்டு வருகிறது.

அதில், ஒவ்வொரு யானை கூட்டத்திலும் குறைந்தது இரண்டு யானை குட்டிகளாவது இருப்பதை காண முடிகிறது. இங்கு, குடியிருப்புகளை ஒட்டிய புதர்களில் தண்ணீர் மற்றும் பசுமையான உணவுகளும் உள்ளதால் யானைகள் அதிக அளவில் முகாமிட்டு தங்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

பொதுவாக யானை குட்டிகள் ஒரு வயது ஆன பின்னரே, தனது துதிக்கையில் புற்களை பறித்து உட்கொள்ள துவங்கும். அதுவரை யானை கூட்டத்தில் உள்ள தாய் யானை உணவு உட்கொள்ளும் வழி முறையை கற்றுத்தரும்.

அதில், பந்தலுார் அருகே காவயல் என்ற இடத்தில், தாய் யானை ஒன்று தனது குட்டிக்கும், வேறொரு யானையின் குட்டிக்கும், புற்களை பறித்து உட்கொள்வதை கற்றுக் கொடுத்தது. அதனைப் பார்த்த யானை குட்டிகளும், புற்களை பறித்து உட்கொள்ளும் முயற்சியை மேற்கொண்டது. இந்த யானைகளின் ருசிகர காட்சியை மக்கள் ரசித்து செல்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us