/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காரை அலேக்காக தூக்கி சேதப்படுத்திய யானை
/
காரை அலேக்காக தூக்கி சேதப்படுத்திய யானை
ADDED : நவ 24, 2024 08:24 AM

பந்தலூர்,: நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், அதிக அளவில் யானைகள் முகாமிட்டு உள்ளன. நேற்று முன்தினம் முக்கட்டி பகுதியில் முகாமிட்டிருந்த ஆண் யானை ஒன்று, மாலை நேரத்தில் சாலையில் இறங்கி நடந்தது. எதிரே பைக்கில் வந்த நபர்கள், பைக்கை கீழே போட்டுவிட்டு தப்பினர்.
அன்று இரவு, நெலாக்கோட்டை பஜார் பகுதிக்கு வந்த மற்றொரு ஆண் யானை சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்த, காரை தந்தத்தால் அலேக்காக துாக்கி கீழே போட்டு சேதப்படுத்தியது. மேலும், பஜார் பகுதியில் உலா வந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். இந்த யானை, ஏற்கனவே இரண்டு கார்களை சேதப்படுத்தியுள்ளது.
உதவி வன பாதுகாவலர் அருள்மொழி வர்மன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இரு யானைகளையும் துரத்தும் பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் சாலைகளில் நடந்து செல்ல வேண்டும். என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

