/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின் சிக்கனம் அவசியம்: விழிப்புணர்வு பேரணி
/
மின் சிக்கனம் அவசியம்: விழிப்புணர்வு பேரணி
ADDED : டிச 18, 2025 07:04 AM

ஊட்டி: தேசிய மின் சிக்கனம் வார விழாவை முன்னிட்டு, ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகில், மின் பகிர்மான கழகம் சார்பில் நடந்த பேரணியை கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார்.
பேரணியில், 'தேவையற்ற நேரங்களில் மின்விளக்குகளை அணைத்து வைப்பது, வெப்பமானியை அதிகபட்சமாக, 40 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு வைப்பது, மின்சாரம் சிக்கனம் செய்வது,' குறித்து, கல்லுாரி மாணவர்கள் பதாகைகள் ஏந்தி, நகரின் முக்கிய சாலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணியில், ஊட்டி ஜோசப் ஆசிரியர் பயிற்சி கல்லுாரி, ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லூரி, எமரால்ட் ஹைட்ஸ் மகளிர் கல்லுாரி ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் மற்றும் மின் பகிர்மான கழக ஊழியர்கள் என, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அதில், தமிழ்நாடு மின்சார பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் சாந்தநாயகி, செயற்பொறியாளர் சிவகுமார், உதவி செயற்பொறியாளர்கள் சந்தீப் மற்றும் நிர்மல்குமார் உட்பட பலர் பங் கேற்றனர்.

