/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திருப்பி விடப்படும் கழிவு நீர்; பாதிக்கப்படும் பொதுமக்கள்
/
திருப்பி விடப்படும் கழிவு நீர்; பாதிக்கப்படும் பொதுமக்கள்
திருப்பி விடப்படும் கழிவு நீர்; பாதிக்கப்படும் பொதுமக்கள்
திருப்பி விடப்படும் கழிவு நீர்; பாதிக்கப்படும் பொதுமக்கள்
ADDED : ஜூலை 22, 2025 09:34 PM
பந்தலுார்; பந்தலுார் அருகே மேபீல்டு; ஒன்பதாவது மைல் கிராம பொதுமக்கள் இணைந்து, நெலாக்கோட்டை ஊராட்சி நிர்வாகத்திடம் வழங்கியுள்ள மனு:
மேபீல்டு, ஒன்பதாவது மைல் சாலை பகுதியை பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த பாதையில் குடியிருக்கும் ஒரு நபர் வீட்டில் இருந்து வெளியேறும் அனைத்து கழிவு நீரையும் சாலைக்கு திருப்பி விட்டுள்ளார்.
இதனால், பாதசாரிகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதுடன், கடும் துர்நாற்றம் வீசி, கழிவு நீர் குடிநீர் கிணறுகளில் கலந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து சுகாதாரத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் தீர்வு ஏற்படவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
--* இதேபோல், உப்பட்டி மேஸ்திரிக்குன்னு பகுதியில் கால்நடைகளை வளர்க்கும் நபர் ஒருவர் கால்நடை கழிவுகளை, பொதுமக்கள் பயன்படுத்தும், சிமென்ட் நடைபாதையை உடைத்து சாலையின் கீழ் பகுதியில் உள்ளதோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு திருப்பி விட்டுள்ளார்.
இதனால், கழிவுகள் குடியிருப்புகளின் சுற்றுப்பகுதிகளிலும், நீர்நிலைகளிலும் கலந்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

