/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணிகளை கவரும் 'டெனிசோனி பார்ப்' மீன்கள்
/
சுற்றுலா பயணிகளை கவரும் 'டெனிசோனி பார்ப்' மீன்கள்
ADDED : பிப் 20, 2024 06:15 AM

கூடலுார்: கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில் உள்ள 'ஆரல்' நன்னீர் மீனகத்தில் 'மிஸ் கேரளா' என்று அழைக்கப்படும் 'டெனிசோனி பார்ப்' மீன்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை நீர் ஆதாரங்களில், 290 வகையான நன்னீர் மீன்கள் உள்ளன. அதில், நீலகிரி மாவட்டத்தில், 110 வகை மீன்கள் காணப்படுகினறன. இயற்கை அழிவு காலநிலை மாற்றம் காரணமாக அழிந்து வரும் நன்னீர் மீன்களை பாதுகாக்க, கூடலுார் நாடுகாணி ஜீன்புல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில், வனத்துறை சார்பில் 'ஆரல்' நன்னீர் மீனகம் அமைக்கப்பட்டது.
இங்கு உள்ளூரில் கிடைக்கும், 'சிலோடி, சேலை பறவை, கவுளி, ஆரம், கல்லொட்டி, சிலோபி,' உள்ளிட்ட, 26 அரிய வகை நன்னீர் மீன்களை சேகரித்து, நவீன மீன் தொட்டிகளில் வளர்த்து வருகின்றனர்.
இதில், 'மிஸ் கேரளா' என அழைக்கப்டும் 'டெனிசோனி பார்ப்' மீன்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
வனத்துறையினர் கூறுகையில், 'மீனகத்தில் உள்ள, 'மிஸ் கேரளா' என அழைக்கப்டும் டெனிசோனி பார்ப் மீன்கள் உடலமைப்பு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. நாட்டில், கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் காணப்படும் இவைகள் அழிவின் விளிம்பில் உள்ளது. இது போன்ற மீன்களை பாதுகாக்கவே இம்மீனகம் அமைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

