/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காந்தை ஆற்றில் பாலம் கட்டும் பணி மந்தம் :வேகப்படுத்த மக்கள் கோரிக்கை
/
காந்தை ஆற்றில் பாலம் கட்டும் பணி மந்தம் :வேகப்படுத்த மக்கள் கோரிக்கை
காந்தை ஆற்றில் பாலம் கட்டும் பணி மந்தம் :வேகப்படுத்த மக்கள் கோரிக்கை
காந்தை ஆற்றில் பாலம் கட்டும் பணி மந்தம் :வேகப்படுத்த மக்கள் கோரிக்கை
ADDED : பிப் 27, 2024 11:36 PM

மேட்டுப்பாளையம்:பணிகள் நடைபெறாமல் இருக்கும், காந்தை ஆறு பாலம் கட்டுமான பணிகளை, உடனடியாக செய்ய விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
சிறுமுகை அருகே லிங்காபுரத்திற்கும், காந்த வயலுக்கும் இடையே, காந்தை ஆற்றின் குறுக்கே, 15.40 கோடி ரூபாய் செலவில், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆற்றின் குறுக்கே, 168 மீட்டர் நீளம், 9.95 மீட்டர் அகலத்தில் பாலமும், பாலத்தின் இரண்டு புறம், சாலையும் அமைக்கப்பட உள்ளன.
உயர் மட்ட பாலம் அமைக்க, ஆற்றின் குறுக்கே ஆறு இடங்களில் தூண்கள் கட்டப்பட உள்ளன. இதில் இரண்டு தூண்கள் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு தூண் பாதி அளவும் கட்டப்பட்டுள்ளது. மேலும், 3 தூண்கள் கட்ட அஸ்திவாரக் குழி தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர் மழையின் காரணமாக துாண்கள் கட்டும் பணிகள் பாதிப்படைந்தன.
தற்போது இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் குழிகளை, தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஐந்து ஆட்கள் பாலம் கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பொது மக்கள், விவசாயிகள் கூறுகையில், ''பணிகள் துவங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில், கால் பங்கு பணிகள் கூட நடைபெறவில்லை. தற்போது காந்தை ஆற்றில் தண்ணீர் முற்றிலும் குறைந்து உள்ளது. அதிகமான ஆட்களை வைத்து, அடுத்த மழை காலம் துவங்கும் முன், ஆற்றின் நடுவே தூண்கள் அமைக்க வேண்டும்.
தற்போது காந்தை ஆற்றில், தண்ணீர் முற்றிலும் குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஒரு மாதமாக பாலம் கட்டும் பணிகள் நடைபெறவில்லை.
எனவே, உடனடியாக பாலம் கட்டும் பணிகளை துவக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து, மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம்,'' என்றனர்.

