/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுாரை பகலில் சூழ்ந்த மேக மூட்டம்; குளிரில் அவதிப்பட்ட மக்கள்
/
பந்தலுாரை பகலில் சூழ்ந்த மேக மூட்டம்; குளிரில் அவதிப்பட்ட மக்கள்
பந்தலுாரை பகலில் சூழ்ந்த மேக மூட்டம்; குளிரில் அவதிப்பட்ட மக்கள்
பந்தலுாரை பகலில் சூழ்ந்த மேக மூட்டம்; குளிரில் அவதிப்பட்ட மக்கள்
ADDED : ஜூலை 21, 2025 08:59 PM

பந்தலுார்; பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், குளிரான காலநிலை ஏற்பட்டதுடன், மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில், மழைக்கு இடையே திடீர் மேகமூட்டம் பந்தலூர் பகுதியில் சூழ்ந்ததால், 'பகலில் ஓர் இரவு' போல காலநிலை மாறியது.
வாகன ஓட்டுனர்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தின் உதவியுடன் வாகனங்களை இயக்கியதுடன், பந்தலுாரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் நீர்மட்டம் பகுதியில், வனத்திற்கு மத்தியில் உள்ள சாலையில் சிரமத்துடன் வாகனங்களை இயக்கினர். மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக, தோட்ட தொழிலாளர்கள் குளிரில் நடுங்கியபடி தங்களின் பணிகளைத் தொடந்தனர். வெளியூர் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் இந்த காலநிலையை ரசித்த வண்ணம் பயணித்தனர்.