/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேசிய நெடுஞ்சாலை முழு சீரமைப்புக்கு மத்திய அரசு... கிரீன் சிக்னல்!'ஆமைவேக' பணிகளால் நான்கு ஆண்டுகளாக அவதி
/
தேசிய நெடுஞ்சாலை முழு சீரமைப்புக்கு மத்திய அரசு... கிரீன் சிக்னல்!'ஆமைவேக' பணிகளால் நான்கு ஆண்டுகளாக அவதி
தேசிய நெடுஞ்சாலை முழு சீரமைப்புக்கு மத்திய அரசு... கிரீன் சிக்னல்!'ஆமைவேக' பணிகளால் நான்கு ஆண்டுகளாக அவதி
தேசிய நெடுஞ்சாலை முழு சீரமைப்புக்கு மத்திய அரசு... கிரீன் சிக்னல்!'ஆமைவேக' பணிகளால் நான்கு ஆண்டுகளாக அவதி
ADDED : நவ 27, 2025 04:44 AM

குன்னுார்: ஊட்டி தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிக்கு, மத்திய அரசு நிதி வழங்க தயாராக உள்ள நிலையில், 'ஆமைவேக' பணிகளால் கடந்த, நான்கு ஆண்டுகளாக பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நீலகிரியில் உள்ள ஐந்து முக்கியமான சாலைகளில், பர்லியார் முதல் கக்கனல்லா வரையிலான சாலை நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு முக்கிய சாலையாக உள்ளது. இந்த மலை பாதையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண கடந்த, 2013ல் விரிவாக்க பணிகள் துவங்கியது.
2021ல், இரண்டாம் கட்டமாக விரிவாக்க பணிகள் துவங்கிய பிறகு, குன்னுார்- ஊட்டி இடையில் பணிகள் முறையாக மேற்கொள்ளாததால் பாதியில் விடப்பட்டன. குறிப்பாக, வெலிங்டன், அருவங்காடு உட்பட பல இடங்களிலும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி உட்பட முழு சாலை சீரமைப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
தொடரும் 'பேட்ச் ஒர்க்' கடந்த நான்காண்டுகளாக சாலையில் 'பேட்ச் ஒர்க்' மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓட்டி செல்ல டிரைவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
அவ்வப்போது பெய்யும் மழையில் சாலையின் மழை வெள்ளம் அடித்து சென்ற மண் சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழையில் சாலையின் வலது புறத்தில் தோண்டப்பட்ட மண்கற்கள் அடித்து செல்லப்பட்டு கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டது. வாகனங்களும் சேற்றில் சிக்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மத்திய அரசு கிரீன் சிக்னல் மழைநீர் கால்வாய் அமைத்த இடங்கள் உயரமாக உள்ளதால் விபத்தும் தொடர்கிறது. ஏற்கனவே, ஊட்டி- குன்னூர் சாலை 'டெண்டர்' பணிகள் பாதியில் நின்றது. மத்திய அரசிடம் டெண்டர் விடும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தப்பட்டதால், மத்திய அரசும் ஆய்வு செய்து பிரச்னைக்கு தீர்வு கண்டு, மலை பாதை முழு சீரமைப்புக்கு நிதி ஒதுக்க கிரீன் சிக்னல் கொடுத்தது.
இந்நிலையில், கடந்த, 3 மாதங்களாக அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தேசிய நெடுஞ்சாலை துறையினர், வெலிங்டன் பிளாக் பிரிட்ஜ் அருகே 'சப்வே' அமைத்தல் உள்ளிட்ட முழு சீரமைப்பு பணிக்கு, 92.4 கோடி ரூபாய் மதிப்பிட்டு அறிக்கை தயார் செய்து சென்னையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இன்ஜினியரிங் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர். அங்கு ஏற்படும் தாமத்தால், பணிகள் மீண்டும் துவங்கியதாக தெரியவில்லை.
தன்னார்வலர் சஜீவன் கூறுகையில்,''இந்த சாலையை சீரமைக்க கோரி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழக முதல்வர் உட்பட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
சீரமைப்பு பணிகள் துவங்காததால், கனமழையால், உயரமாக தோண்டப்பட்ட இடத்தில் மண் சரிவு ஏற்படுவதுடன், விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு அபாயமும் தொடர்கிறது, தேர்தல் மற்றும் கோடை சீசனுக்கு முன்பு சாலையை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ' மலை பாதையில் கைவிடப்பட்டுள்ள சாலை பணிகளுக்கான திட்ட அறிக்கை தயார் செய்து வழங்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் போக்குவரத்து அமைச்சரிடமும் தெரிவித்து முயற்சிகள் நடந்து வருகிறது. விரைவில் பணிகள் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றனர்.

