/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் கள்ளி செடிகள்
/
தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் கள்ளி செடிகள்
தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் கள்ளி செடிகள்
தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் கள்ளி செடிகள்
ADDED : டிச 18, 2025 07:07 AM
ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பெரணி செடிகள், கள்ளி செடிகளுக்கு என்று தனியாக உள்ள கண்ணாடி மாளிகையில் பல்வேறு வகையான கள்ளி செடிகள் உள்ளன. தற்போது புதுவரவாக கண்ணாடி மாளிகையில், வட மாநிலங்களில் இருந்து அரிய வகை கள்ளி செடிகள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
பூங்கா உதவி இயக்குனர் பிபீதா கூறுகையில்,''தாவரவியல் பூங்கா மேம்பாட்டிற்கு தமிழக அரசு ரூ.3 கோடி ஒதுக்கி உள்ளது. தற்போது,' மேற்குவங்கம், சிக்கிம் போன்ற பகுதிகளில் இருந்து, 10 வகையான கள்ளி செடிகள் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன. 'மேப்பிள், மக்னோரியா, பைரகாந்தா, பூக்கும் பீச்' போன்ற செடிகளும் வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரும் சுற்றுலா பயணிகள் புதிதாக வந்துள்ள கள்ளி செடிகளை ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்ற னர்,''என்றார்.