/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊர்களின் பெயர்கள் இல்லாமல் இயக்கப்படும் பஸ்கள்: தடுமாறும் பயணிகள்
/
ஊர்களின் பெயர்கள் இல்லாமல் இயக்கப்படும் பஸ்கள்: தடுமாறும் பயணிகள்
ஊர்களின் பெயர்கள் இல்லாமல் இயக்கப்படும் பஸ்கள்: தடுமாறும் பயணிகள்
ஊர்களின் பெயர்கள் இல்லாமல் இயக்கப்படும் பஸ்கள்: தடுமாறும் பயணிகள்
ADDED : ஜன 24, 2026 05:04 AM

பந்தலுார்: பந்தலுார் மற்றும் கூடலுார் சுற்று வட்டார பகுதிகளுக்கு, அரசு போக்குவரத்து கழகத்தின் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பழைய பஸ்களில் ஊர்களின் பெயர் பலகைகள், எழுதி வைக்கப்பட்டு இருப்பதுடன், பக்கவாட்டு மேல் கண்ணாடிகளில் ஊர்களின் பெயர்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டு இயக்கப்பட்டு வந்தது.
தற்போது, பழைய பஸ்கள், புதிய பஸ்களாக உருமாற்றம் பெற்று உள்ள நிலையில், டிஜிட்டல் பெயர் பலகைகளாக மாற்றம் செய்யப்பட்டது. அதில், பல பஸ்களில் டிஜிட்டல் போர்டுகள் செயல்படாத நிலையில், ஊர்களின் பெயர் இல்லாமலே பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால், பயணிகள் பெரும் குழப்பம் அடைகின்றனர். எனவே, பஸ்களில் ஊர்களின் பெயர்கள் தெளிவாக, தெரியும்படி எழுதி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.