/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரத்த சேமிப்பு வங்கி மற்றும் வாகனம் ரூ. 50 லட்சத்துக்கு அரசாணை
/
ரத்த சேமிப்பு வங்கி மற்றும் வாகனம் ரூ. 50 லட்சத்துக்கு அரசாணை
ரத்த சேமிப்பு வங்கி மற்றும் வாகனம் ரூ. 50 லட்சத்துக்கு அரசாணை
ரத்த சேமிப்பு வங்கி மற்றும் வாகனம் ரூ. 50 லட்சத்துக்கு அரசாணை
ADDED : மார் 13, 2024 10:03 PM
ஊட்டி : கோத்தகிரி அரசு மருத்துவமனை, ஊட்டி மருத்துவ கல்லுாரியில் ரத்த வங்கி மற்றும் ரத்த பரிசோதனை வாகனம் உட்பட கருவிகளுக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
ஊட்டியில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான சுகாதார பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த கலெக்டர் அருணா கூறியதாவது:
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ரத்த சேமிப்பு வங்கி, மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு நடமாடும் ரத்த சேமிப்பு வாகனம் மற்றும் ரத்த புரத அணு நோய்க்கான பரிசோதனை கருவி ஆகியவைக்காக, 50 லட்சம் ரூபாய்க்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார துறை மேம்பட தேவையான கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்கள், போக்குவரத்து வசதி குறித்து, மாவட்ட சுகாதார பேரவைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, மாவட்ட அளவிலேயே சரி செய்யக்கூடியவை என பிரிக்கப்பட்டு, மாநில பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை மேம்பட வேண்டும் என்பதற்காக, மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் பணியாற்றி வருகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.
முன்னதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, குடும்ப நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில், அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.
அதில், மருத்துவ நல பணிகள் இணை இயக்குனர் (பொ) பரமேஸ்வரி, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி உட்பட, பலர் பங்கேற்றனர்.

