/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆயிரம் வில்லி பகவதி அம்மன் கோவில் திருவிழா தாலப்பொலி ஏந்தி பெண்கள் பங்கேற்பு

ADDED : பிப் 25, 2024 10:57 PM

கூடலுார்:கூடலுார் புளியம்பாறை ஸ்ரீ ஆயிரம் வில்லி பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழாவில், பெண்கள் தாலப்பொலி ஏந்தி பங்கேற்றனர்.
கூடலுார் புளியம்பாறையில் மிகவும் பழமையான, ஸ்ரீ ஆயிரம் வில்லி பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று முன்தினம் காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 6:00 மணிக்கு பஞ்சகவ்ய கலசம் நிகழ்ச்சியும், 9:00 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சியும் நடந்தது.
காலை, 11:30 மணிக்கு பெரிய வீடு வண்ணார குடியிலிருந்து புறப்பட்ட இளநீர் பூங்குழல், தாலப்பொலியுடன் ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது.
இரவு, 7:30 மணிக்கு அட்டிக்கொல்லி பகவதி அம்மன் கோவிலில் இருந்து, செண்டை மேளம், பழங்குடியினர் பாரம்பரிய இசையுடன் தேர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில், குழந்தைகள், பெண்கள் தாலப்பொலி ஏந்தி பங்கேற்றனர்.
ஊர்வலம் மரப்பாலம் -புளியம்பாறை சாலை, ஆத்துார் சாலை வழியாக கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது.
நேற்று, காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமமும் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், அருள் வாக்கு நிகழ்ச்சியும் நடந்தது. மதியம் காணிக்கை பொருள்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலை, 5:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது.