/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சில்வர், கண்ணாடி பொருட்களை பயன்படுத்த விழிப்புணர்வு
/
சில்வர், கண்ணாடி பொருட்களை பயன்படுத்த விழிப்புணர்வு
சில்வர், கண்ணாடி பொருட்களை பயன்படுத்த விழிப்புணர்வு
சில்வர், கண்ணாடி பொருட்களை பயன்படுத்த விழிப்புணர்வு
ADDED : பிப் 25, 2024 10:25 PM
அன்னுார்:பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதில், சில்வர் மற்றும் கண்ணாடி பொருட்களை பயன்படுத்த அறிவுறுத்தும் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை உதவியுடன், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையும், கடமலை குண்டு தொண்டு நிறுவனமும் இணைந்து, கோவில்பாளையம், அன்னுாரில் பள்ளி, மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு தகவல் வாகனப் பிரசாரம் நடத்தின.
இதில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது, கலைநிகழ்ச்சியில், 'தற்போது ஒருமுறை மட்டும் பயன்படுத்தி துாக்கி எறியும் பேப்பர், பிளாஸ்டிக் டீ கப், காபி கப், தண்ணீர் கப் ஆகியவை ஹோட்டல், பேக்கரி, வீடுகள், கல்யாண மண்டபங்கள் ஆகியவற்றில் அதிக அளவில் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. இது சுற்றுச்சூழலை பாதிக்கும்.
பொதுமக்கள் பாரம்பரியமான முறையில் கண்ணாடி டம்ளர், சில்வர் தட்டு, வாழை இலை ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். துணி பைகளை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும். கடைக்குச் செல்லும் போது கண்டிப்பாக துணிப்பையை எடுத்துச் செல்ல வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நடனம் மற்றும் நாட்டியம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பாலுசாமி மற்றும் கலைஞர்கள் பங்கேற்றனர்.

