/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வு முகாம்
/
தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வு முகாம்
ADDED : பிப் 28, 2024 12:26 AM
கோத்தகிரி:கோத்தகிரி நீலகிரி ஆதிவாசிகள் நல சங்கம் (நாவா) அலுவலகத்தில், மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ், இயங்கி வரும் கோவை, எம்.எஸ்.எம்.இ., தொழில் வளர்ச்சி அலுவலகம் மூலம், தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நாவா செயலாளர் ஆல்வாஸ் தலைமை வகித்தார். முகாமில், பழங்குடியின இளைஞர்கள் மற்றும் பெண்கள், 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தொழில் வளர்ச்சி அலுவலக உதவி இயக்குனர் கயல்விழி, சுயத்தொழில் தொடங்குவதன் நடைமுறைகள், ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
மேலும், முகாமில் பங்கேற்ற பயனாளிகளின் தொழில் தொடங்குவதற்கான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
பாரத ஸ்டேட் வங்கி கோத்தகிரி கிளை மேலாளர் அருண், தொழில் தொடங்குபவர்களுக்கு வங்கிகள் வழங்கும் சலுகைகள் குறித்து விளக்கினார்.
இதில், 'நாவா' பொருளாளர் சுப்ரமணியம், நாவா பள்ளி முதல்வர் பூவிழி மற்றும் ஜே.சி.ஐ., மண்டல பயிற்சியாளர் ரமேஷ் உட்பட, தொழில் முனைவோர் பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் முத்துசாமி, மனோகரன் மற்றும் திருமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

