/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கல்வி உரிமை சட்டமும் எங்களுக்கு மறுக்கப்படுகிறதா? காட்டு நாயக்கன் பழங்குடியின மக்கள் கலெக்டரிடம் மனு

ADDED : ஜூலை 14, 2025 08:57 PM

ஊட்டி; 'அரசு ஆரம்ப பள்ளியை தொடர்ந்து இங்கேயே செயல்பட அனுமதிக்க வேண்டும்,' என, பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலுார் அருகே பென்னை பகுதியில் வசித்த, காட்டு நாய்க்கன் பழங்குடி மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
முதுமலை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்ட பிறகு பென்னை பகுதியில் வாழ்ந்து வந்த காட்டு நாய்க்கன் பழங்குடி மக்கள், 2016ம் ஆண்டு வனப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, 'ஒன்றாம் நம்பர்' பாலப்படுகை பகுதியில் மறு குடியமர்த்தப்பட்டனர். எங்களுக்காக கட்டப்பட்ட இரண்டு தொகுப்பு வீட்டில் அரசு ஆரம்ப பள்ளி கடந்த, 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வன உரிமைச்சட்டம், 2006 ன் படி பள்ளி கட்டடம், ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற வளர்ச்சி திட்டங்களுக்கு வனநிலம், 2.5 ஏக்கர் எடுத்துக் கொள்ள சட்டம் அனுமதியளிக்கிறது என்பதால், அந்த நிலத்தில் புதிய அரசு பள்ளி கட்டடம் கட்டித் தர வலியுறுத்தி ஏற்கனவே கலெக்டரிடம் மனு அளித்தோம்.
இந்த சூழ்நிலையில், 2025--26 கல்வியாண்டில், பலப்படுகை பகுதியில் செயல்பட்டு வந்த அரசு ஆரம்ப பள்ளி மூடப்பட்டு விட்டதாக செய்திகள் வாயிலாக அறிகிறோம். எங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றியும், எங்களிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல் ஆரம்ப பள்ளி மூடப்பட்டு விட்டதாக வந்த தகவல் எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பழங்குடி குழந்தைகள் கல்வி கற்பதில் மிகவும் பின் தங்கியுள்ள சூழலில், எங்கள் பகுதியில் உள்ள பள்ளியை மூட கூடாது. கல்வி உரிமைச் சட்டமும் மறுக்கப்பட்டால் நாங்கள் எங்கு செல்ல முடியும். எனவே, எங்கள் பகுதியில் செயல்பட்டு வந்த அரசு ஆரம்ப பள்ளியை தொடர்ந்து செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.