/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் தகவல்
/
கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் தகவல்
கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் தகவல்
கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் தகவல்
ADDED : பிப் 03, 2024 12:28 AM

ஊட்டி:“தமிழகத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,” என, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு மீன் கண்காட்சியம், உறைவிந்து உற்பத்தி மையத்தில், மாநில மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்த பின், நிருபர்களிடம் கூறியதாவது:
கோடை காலத்தில், தமிழகத்தில் உள்ள கால் நடைகளுக்கு பசுந்தீவனம் வழங்க முதல்வர் ஆணை படி, மானாவாரி நிலங்களில் புல் வளர்ப்பு திட்டம் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் புல் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
நீலகிரியில் உள்ள கால்நடைகளுக்கு, ஊட்டியில் பசுந்தீவனம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் வழங்கப்படும். பசுக்களை போன்று ஆடு, எருமை போன்ற மற்ற கால்நடைகளின் உறைவிந்து உற்பத்தி மையம் அமைப்பதற்கான அறிவிப்பை, முதல்வர் அடுத்த பட்ஜெட்டில் அறிவிக்க உள்ளார்.
மேலும், தமிழகத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக, ஆறு மாதங்களுக்கு முன்பு, முதல்வர் உறை விந்து உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதன்படி ஒரு உறைவிந்து தயாரிக்க, 25 ரூபாய் செலவாகிறது. ஆனால் கால்நடை பராமரிப்பு துறை விவசாயிகளுக்கு, ஒரு உறை விந்தை, 10 ரூபாய்க்கு வழங்கி வருகிறது.நீலகிரியில், தோடர் இன எருமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வுகளை மாநில கால்நடை பராமரிப்பு துறை பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. ஊட்டியில் உள்ள மீன் காட்சியகம் மேம்படுத்தப்படும். இப்பகுதியில், சூழல் சுற்றுலா பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன், கலெக்டர் அருணா, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பகவத் சிங் உட்பட பலர் பங்கேற்றனர்.

