தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பிழையில்லா இறுதி பட்டியல் வெளியிட வேண்டும்

 பிழையில்லா இறுதி பட்டியல் வெளியிட வேண்டும்

 பிழையில்லா இறுதி பட்டியல் வெளியிட வேண்டும்


ADDED : பிப் 10, 2026 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 04:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: 'பிழையில்லா இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும்,' என, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அறிவுறுத்தினார்.

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் லட்சுமி பவ்யா முன்னிலை வகித்தார். வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராகுல் நாத் தலைமை வகித்து, கடந்த, டிச., 19ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் எண்ணிக்கையை கேட்டறிந்தார்.

மேலும், 'தற்போது நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பெயர்கள் விடுபடாமல் சேர்ப்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. மாவட்டத்தில் தற்போது, 100 முதல் 109 வயதுக்குள் உள்ள, 14 வாக்காளர்களில் ஒருவர் கடந்த ஜன., மாதம் இறந்துள்ளதால, 13 ஆக குறைந்துள்ளது.

எனவே, வாக்காளர் பதிவு அலுவலர்கள், 100 வயதுக்கு மேல் உள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று நேரடியாக தணிக்கை மேற்கொள்ள வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியலில் நேரடி ஆய்வின்போது சம்பந்தப்பட்ட முகவரியில் வசிக்காதவர்கள் ( இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள்) ஆகியவற்றை சரிபார்த்து பெயர் நீக்கம் செய்து பிழையில்லா இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது. கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அபிலாஷா கவுர், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) லோகநாயகி , சப் கலெக்டர் சங்கீதா, ஆர்.டி.ஓ. ,க்கள் டி னு அரவிந்த் , குணசேகரன், தேர்தல் தாசில்தார் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us