/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நுழைவு கட்டண வசூலில் தீவிரம் குப்பை அகற்றுவதில் மெத்தனம்
/
நுழைவு கட்டண வசூலில் தீவிரம் குப்பை அகற்றுவதில் மெத்தனம்
நுழைவு கட்டண வசூலில் தீவிரம் குப்பை அகற்றுவதில் மெத்தனம்
நுழைவு கட்டண வசூலில் தீவிரம் குப்பை அகற்றுவதில் மெத்தனம்
ADDED : நவ 14, 2024 05:34 AM

குன்னுார்: பர்லியார் ஊராட்சிக்கு உட்பட்ட டால்பின்நோஸ் காட்சிமுனை பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன.
குன்னுார் டால்பின்நோஸ் காட்சி முனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு பர்லியார் ஊராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு, சுற்றுலா வரும், 4 சக்கர வாகனங்களுக்கு, 20 ரூபாய்; இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாய் வசூலிக்க உத்தரவிட்ட நிலையில், 4 மடங்கு கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இங்கு நாள்தோறும் துாய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டிய பர்லியார் ஊராட்சி, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால், தொட்டியில் நிரம்பிய குப்பைகள் சாலையில் சிதறி கிடக்கிறது.
அதில், பிளாஸ்டிக், மது பாட்டில்கள் உட்பட உணவு கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளதால், சுற்றுச்சூழல் பாதித்துள்ளது. துர்நாற்றம் வீசுவதால் சுற்றுலா பயணிகள் முகம் சுளித்து செல்கின்றனர். எனவே, குப்பைகளை நாள்தோறும் அகற்றி துாய்மை படுத்துவதுடன் பார்க்கிங் பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும்.

