/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நெகிழிக்கு மாற்று பொருள் தயாரிக்கலாம் தொழில் முனைவோருக்கு அறிவுரை
/
நெகிழிக்கு மாற்று பொருள் தயாரிக்கலாம் தொழில் முனைவோருக்கு அறிவுரை
நெகிழிக்கு மாற்று பொருள் தயாரிக்கலாம் தொழில் முனைவோருக்கு அறிவுரை
நெகிழிக்கு மாற்று பொருள் தயாரிக்கலாம் தொழில் முனைவோருக்கு அறிவுரை
ADDED : பிப் 25, 2024 11:05 PM
ஊட்டி:'நீலகிரியில் தொழில் முனைவோர் நெகிழிக்கு மாற்றுப் பொருளை தயாரிக்கும் தொழிலை துவங்கினால், பாதுகாக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டது
ஊட்டியில், மாவட்ட தொழில் மையம் சார்பில், கடன் வழங்கும் விழா நடந்தது.
விழாவுக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி பேசியதாவது:
நீலகிரி மாவட்டம், தேயிலை மற்றும் சுற்றுலாவை நம்பி உள்ளது. இப்பகுதி காடும் காடு சார்ந்த இடமாக உள்ளதால், தொழில் சார்ந்த நிறுவனங்கள் குறைவு. அதனால், மாவட்ட தொழில் மையம் முன்னோடி வங்கி மூலமாக புதிய தொழில் துவங்க கடனுதவி வழங்கப்படுகிறது.
ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவி குழுக்களின் வாழ்வாதாரம் உயர கடன் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு, தொழில் நிறுவனங்கள் குறைவாக இருப்பதால், படித்து முடித்த வேலை நாடுபவர்கள், அரசு பணி மற்றும் மென்பொருள் நிறுவனங்களில் வேலையில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். மாறாக, சுயதொழில் செய்து தொழில் முனைவோராக மாற தயக்கம் காட்டுகின்றனர்.
சுயதொழில் செய்தால் இழப்பு ஏற்பட்டு விடும். அந்த இழப்பில் இருந்து எவ்வாறு மீள்வது என்ற குழப்பம் அவர்களிடம் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தான், தொழில் முனைவர்களுக்கான கடன் வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
தொழில் முனைவோராக மாற வேண்டுமானால், அந்த தொழில் தொடங்க முதலீடு குறித்து திட்டமிட வேண்டும். மானிய திட்டங்களை பெற என்ன தகுதி வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
நீலகிரியில் தொழில் முனைவோர்கள் எதிர்காலத்தையும் சுற்றுச்சூழலையையும் கருத்தில் கொண்டு, நெகிழிக்கு மாற்று பொருளை தயார் படுத்தும் வகையிலான தொழில் துவங்கலாம். இதனை தயார்படுத்தினால் நல்ல எதிர்காலம் உள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.

