/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிணற்றில் விழுந்த பசு; தீயணைப்பு துறையினர் மீட்பு
/
கிணற்றில் விழுந்த பசு; தீயணைப்பு துறையினர் மீட்பு
ADDED : பிப் 28, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:குன்னுாரில் பாழடைந்த கிணற்றில் விழுந்த பசு தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் ஆழ்வார்பேட் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் வளர்த்து வந்த பசு நேற்று பகல் அங்கிருந்த பாழடைந்த கிணற்றில் விழுந்து, மேலே வர முடியாமல் சிக்கித் தவித்தது.
இது குறித்த தகவலின் பேரில் குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்ரமணியன் (பொ) தலைமையில் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று, ஒரு மணி நேரம் போராடி பசுவை மீட்டனர்.

