/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இதுவரை அரசியல்வாதிகள் பாதம் படாத... எல்லையோர கிராமம்! தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மட்டும் 'விசிட்'
/
இதுவரை அரசியல்வாதிகள் பாதம் படாத... எல்லையோர கிராமம்! தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மட்டும் 'விசிட்'
இதுவரை அரசியல்வாதிகள் பாதம் படாத... எல்லையோர கிராமம்! தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மட்டும் 'விசிட்'
இதுவரை அரசியல்வாதிகள் பாதம் படாத... எல்லையோர கிராமம்! தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மட்டும் 'விசிட்'
ADDED : மார் 18, 2024 11:35 PM

பந்தலுார்;பந்தலுார் அருகே கிளன்ராக் வனப்பகுதியில், காட்டுநாயக்கர் பழங்குடியினர் வசிக்கும் கிராமத்துக்கு இதுவரை அரசியல்வாதிகள் செல்லாததால் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
கூடலுார் சட்டசபை தொகுதியில் மொத்தம், ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 614 வாக்காளர்கள் உள்ளனர். அதில், பழங்குடியின வாக்காளர்கள் மட்டும், 9,000 பேர் உள்ளனர்.
நம் மாநிலத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அரசியல்வாதிகள், ஓட்டுக்களை பெறுவதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாள தயாராகி விட்டனர்.
அதில், நகர பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு, 'தண்ணீர் பிடித்து தருவது; உணவு கடைகளில் தோசை ஊற்றுவது, வாக்காளர்களின் கால்களில் விழுவது,' என, பல்வேறு சம்பவங்கள் அரங்கேற உள்ளன.
ஆண்டுதோறும் ஒவ்வொரு வீதிகள் தோறும், வீடுகள் தோறும் இது போன்ற செயல்கள் நடக்கும் நிலையில், அரசியல்வாதிகளின் பாதங்கள் படாத பல பழங்குடியினர் கிராமங்கள் நீலகிரியில் உள்ளது என்பதை நம்பிதான் ஆக வேண்டும்.
23 வாக்காளர்களுடன் ஒரு கிராமம்
அதில் ஒன்று, பந்தலுாரில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள கிளன்ராக் வனப்பகுதியில் உள்ள பழங்குடியினர் கிராமம். இங்கு காட்டு நாயக்கர் மற்றும் பணியர் சமுதாய மக்கள் ஒன்பது குடும்பங்களில் வசித்து வருகின்றனர். அதில், 23 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த பகுதி, தமிழக- கேரள எல்லையில் உள்ளதால், நக்சல்கள் வந்து செல்வது வழக்கம். அவ்வப்போது நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் அதிரடிப்படை போலீசார் இந்த கிராமத்திற்கு சென்று வருவது தொடர்கிறது.
அரசியல்வாதிகள் வந்ததில்லை
ஆனால், இந்த கிராமத்துக்கு ஓட்டு கேட்க கூட இதுவரை எந்த அரசியல்வாதிகளும் வந்தது இல்லை. மாறாக அரசு அதிகாரிகள் மட்டுமே தேர்தல் நேரங்களில் இந்த கிராமத்தை நாடிச் சென்று, 'ஓட்டு போட வேண்டும்,' என விழிப்புணர்வு ஏற்படுத்துவது வழக்கம்.
அந்த அதிகாரிகளின பேச்சுக்கு மதிப்பளித்து, தேர்தல் நாளன்று வன விலங்குகள் அச்சத்துடன, 10 கி.மீ., நடந்து வந்து, தங்கள் தேசத்தின் கடமையை நிறைவேற்றி சென்று விடுவர். அதன் பின்னர், அதிகாரிகள் தங்கள் கிராமத்திற்கு வர வேண்டும் என்றால், மறு தேர்தல் வர வேண்டும்.
பண்டைய பழங்குடி அமைப்பின் நிர்வாகி சந்திரன் கூறுகையில்,'' நீலகிரி மாவட்டத்தில், இதுவரை அரசியல்வாதிகள் பாதம் படாத பல்வேறு பழங்குடியின கிராமங்கள் உள்ளன. ஆனால், கூலி வேலை செய்யும் பழங்குடியினர் தேர்தல் நாளன்று பணிக்கு செல்லாமல், ஓட்டு போடுவதை தங்களின் சுய கவுரவமாக கருதி ஓட்டளிக்கின்றனர்.
அவர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் கிடைப்பதில்லை. ஆனால், நகரில் ஓட்டு போடாமல் வசிக்கும் பலருக்கு எல்லாவித அரசின் சலுகையும் கிடைக்கிறது. இந்த நிலை எப்போது மாறும் என்பது தெரியவில்லை,'' என்றார்.

