/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் 1.77 டன் போதை வஸ்துக்கள் அழிப்பு
/
குன்னுாரில் 1.77 டன் போதை வஸ்துக்கள் அழிப்பு
ADDED : பிப் 28, 2024 12:12 AM

குன்னுார்;குன்னுாரில் பறிமுதல் செய்யப்பட்ட, 1.77 டன் போதை வஸ்துக்கள் அழிக்கப்பட்டன.
குன்னுாரில் கடந்த, 2021 டிச., 3ம் தேதி போலீசார் நடத்திய வாகன சோதனையில், மைசூரில் இருந்து குன்னுாருக்கு லாரியில் தேங்காய் நார்களுக்கு இடையே, தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் கொண்டு வந்தது தெரிய வந்தது.
அதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1.77 டன் போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மைசூரை சேர்ந்த டிரைவர் ராஜூ, 26, மைசூர் உதயகிரியை சேர்ந்த சுரேஷ், 28, அக்ரஹாராவை சேர்ந்த குரு ராஜ், 25 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட எஸ்.பி., உத்தரவின் பேரில், குன்னுார் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில், எஸ்.ஐ., கனகராஜ், கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில், குன்னுார் ஓட்டுபட்டறை பகுதியில் உள்ள, குப்பை மேலாண்மை மையத்தில் உள்ள, 'ஹை டெம்ப்ரேச்சர் குளோஸ்ட் பர்னிங்' எனப்படும் உயர் வெப்ப மூடப்பட்ட இயந்திர அடுப்பில், போதை வஸ்துகள் கொண்ட, 75 மூட்டைகளாக போதை வஸ்துக்கள் எரிக்கப்பட்டன.
போலீசார் கூறுகையில், 'தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துகளை தொடர்ச்சியாக பிடித்து அழித்து வருகிறோம். இதனை கடத்தி வருவதும், உள்ளூரில் விற்பனை செய்வதும் குற்றமாகும்.
எனவே, இதனை கர்நாடக, கேரளாவில் இருந்து கடத்த கூடாது. தடையை மீறிய இவற்றை கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

