/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'காரமடையில் தேசியம், தெய்வீகம் ஒன்றாக உள்ளது' மத்திய இணை அமைச்சர் முருகன் பேச்சு
/
'காரமடையில் தேசியம், தெய்வீகம் ஒன்றாக உள்ளது' மத்திய இணை அமைச்சர் முருகன் பேச்சு
'காரமடையில் தேசியம், தெய்வீகம் ஒன்றாக உள்ளது' மத்திய இணை அமைச்சர் முருகன் பேச்சு
'காரமடையில் தேசியம், தெய்வீகம் ஒன்றாக உள்ளது' மத்திய இணை அமைச்சர் முருகன் பேச்சு
ADDED : மார் 28, 2024 05:32 AM

மேட்டுப்பாளையம், : காரமடையில் மக்கள் தேசியத்தையும், தெய்வீகத்தையும் ஒன்றாக பார்க்கின்றனர் என மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார்.
மேட்டுப்பாளையம் மற்றும் காரமடையில், நீலகிரி லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான முருகன் பல்வேறு இடங்களுக்கு சென்று ஊர் பிரமுகர்களை சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும் தனக்கு ஆதரவும் கோரினார். அதன் படி, மேட்டுப்பாளையம் அனைத்து இந்து சமுதாய சங்கம், நந்தவனத்தில் நிர்வாகிகளையும், காரமடை மகாத்மா காந்தி பகுதியில், ஊர் பிரமுகர்களையும் சந்தித்து பேசினார்.
அப்போது மத்திய இணை அமைச்சர் முருகன் பேசுகையில், பிரதமர் மோடி தேசியத்தையும், தெய்வீகத்தையும் ஒன்றாக பார்ப்பவர். அதே போல் காரமடையில் உள்ள நீங்களும், தேசியத்தையும், தெய்வீகத்தையும் ஒன்றாக பார்க்கின்றனர். பிரதமர் மோடி, நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றுக்கொண்டிருக்கிறார். அவரால் மட்டுமே நாட்டை வளர்ச்சியடைய வைக்க முடியும்.
மேட்டுப்பாளையம் வட்டாரத்தை முன்னேற்ற வேண்டும். அதற்கான குறிக்கோளுடன் செயல்படுவேன். மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் உள்ள கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவைக்கு அடுத்த பெரிய ரயில்நிலையமாக மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் வந்திருக்க வேண்டும். மேட்டுப்பாளையம் -கோவை இடையே இரட்டை ரயில் வழித்தடம் கொண்டு வந்தே தீருவோம். மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசிக்கு நான்கு வழிச்சாலையும், மேட்டுப்பாளையத்தில் புறவழிச்சாலையும் அமைக்கப்படும்.
2048ல் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா இருக்கும். அது நம் பிரதமர் மோடியால் மட்டுமே சாத்தியமாகும், என்றார்.
காரமடை டீச்சர்ஸ் காலனி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர்,முன்னாள் கிளை செயலாளர் ரங்கநாதன் தலைமையில், மத்திய இணை அமைச்சர் முருகன் முன்னிலையில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிகளில், கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.,தலைவர் சங்கீதா, துணை தலைவர் விக்னேஷ், பா.ஜ.,மாநில செயற்குழு உறுப்பினர் சதீஸ்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

