/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கொட்டித் தீர்த்த மழை: மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு
/
கொட்டித் தீர்த்த மழை: மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு
கொட்டித் தீர்த்த மழை: மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு
கொட்டித் தீர்த்த மழை: மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 18, 2024 11:34 PM

ஊட்டி:நீலகிரியில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுாரில் கொட்டித் தீர்த்த மழைக்கு மூன்று மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த, 4ம் தேதி முதல் மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது.
நேற்று ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுாரில் கன மழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களில், 15 செ.மீ., மழை பெய்துள்ளது. கோத்தகிரியில் இடுக்கரை, எம். கைகாட்டி பகுதிகளில், ராட்சத மரம் சாலையில் விழுந்து ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி -- குன்னூர் சாலையில், பன்சிட்டி அருகில், வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழை நீர் தேங்கியது. பொக்லைன் மூலம் தடுப்பு உடைக்கப்பட்டு தண்ணீரை வெளியேற்றிய பின் போக்குவரத்து சீரானது.
குன்னுார் டானிங்டன் பிரிட்ஜ் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு தடுப்பு சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. பொக்லைன் உதவியுடன் கற்கள் அகற்றப்பட்டன. காந்திபுரம் பகுதியில் ராஜூ என்பவரின் வீடு இடிந்தது. பகலில் வெயிலை தொடர்ந்து இதமான கால நிலை நிலவியது.-----
போக்குவரத்து பாதிப்பு
--கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு பலத்த மழை பெய்தது. கோழிக்கோடு சாலை இரும்புபாலம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.
இதனால், தமிழக -- கேரளா -- கர்நாடக இடையே,போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டது.
கூடலூர் தீயணைப்பு துறையினர் பொக்லைன் உதவியுடன் நள்ளிரவு 1:30 மணிக்கு மண் குவியலை அகற்றிய பின் போக்குவரத்து சீரானது. சுற்றுலா பயணியர் பல மணி நேரம் வாகனத்தில் அமர்ந்திருந்ததால் அவதியடைந்தனர்.
கூடலூர் தொரப்பள்ளி அருகே குனில் பகுதியில் விவசாய நிலத்தில் மழைநீர் தேங்கியது. இன்று, நாளையும் மழை தொடரும் என்பதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறையினரையும் தயார் நிலையில் வைத்துள்ளது.

