/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குறுகலான சாலையில் தடுமாறும் வாகனங்கள்
/
குறுகலான சாலையில் தடுமாறும் வாகனங்கள்
ADDED : ஜூலை 29, 2024 11:43 PM

பந்தலுார்;பந்தலுார் பகுதியில் குறுகலான சாலையில் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது.
பந்தலுார் அருகே, கொளப்பள்ளி பகுதியில் இருந்து கேரளா மாநிலம் வயநாடு செல்லும் சாலை அய்யன் கொல்லி வழியாக செல்கிறது. இந்த சாலையில் கொளப்பள்ளி முதல் அய்யன்கொல்லி வரை குறுகலான சாலையாக அமைந்துள்ளது. இதனால், எதிர் எதிரே வரும் வாகனஓட்டுனர்கள் வழி விட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சாலையில், எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும்போது அரசு பஸ், மின்கம்பத்தில் மோதி மின்சாரம் பாய்ந்து இரண்டு பேர் உயிரிழந்தனர்.
எனினும், இந்த சாலையை அகலப்படுத்துவதில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், அலட்சியம் காட்டி வருகின்றனர். தற்போது, மழை பெய்து வருவதால் சாலையின் ஓரப்பகுதிகள் இடிந்து காணப்படும் நிலையில், எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட்டால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதுபோன்ற சாலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து அகலப்படுத்த வேண்டும்.

