/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொழுகை முடித்து வந்தவர்களிடம் பிரசாரம்
/
தொழுகை முடித்து வந்தவர்களிடம் பிரசாரம்
ADDED : ஏப் 12, 2024 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்;குன்னுார் ரம்ஜான் தொழுகை முடித்து வந்த இஸ்லாமிய மக்களிடம் தி.மு.க.,வினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் ஓட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
குன்னுாரில் நேற்று ரம்ஜான் தொழுகை முடித்து, இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது, நீலகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜாவுக்கு ஓட்டு கேட்டும், ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்தும், துண்டு பிரசுரம் வழங்கியும் தி.மு.க.,வினர். பிரசாரம் மேற்கொண்டனர்.
இதே போல, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயகுமாருக்கு ஓட்டளிக்க கோரி, கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

