/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உலா வரும் முள்ளம்பன்றி அருவங்காடு மக்கள் அச்சம்
/
உலா வரும் முள்ளம்பன்றி அருவங்காடு மக்கள் அச்சம்
ADDED : மார் 28, 2024 05:15 AM

குன்னுார் : குன்னுார் அருவங்காடு அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் முள்ளம்பன்றிகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு, உணவு, தண்ணீரை தேடி வன விலங்குகள் வந்து செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அருவங்காடு உதயம் நகர் பகுதியில் இரு முள்ளம் பன்றிகள் உணவை தேடி மாலை, இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்கு வந்து செல்கின்றன. இதன் முள் விஷம் வாய்ந்தது என்பதால் மக்கள் அச்சத்தில் செல்கின்றனர்.
மக்கள் கூறுகையில், 'கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட இந்த பகுதியில் வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என்றனர்.

