/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கொலகம்பையில் குடிநீர் தட்டுப்பாடு நோயாளிகள், மாணவர்கள் அவதி
/
கொலகம்பையில் குடிநீர் தட்டுப்பாடு நோயாளிகள், மாணவர்கள் அவதி
கொலகம்பையில் குடிநீர் தட்டுப்பாடு நோயாளிகள், மாணவர்கள் அவதி
கொலகம்பையில் குடிநீர் தட்டுப்பாடு நோயாளிகள், மாணவர்கள் அவதி
ADDED : மார் 22, 2024 10:16 PM
குன்னுார்;குன்னுார் அருகே மேலுார் ஊராட்சிக்கு உட்பட்ட கொலகம்பை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்த பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் துவங்கியுள்ளது.
இதன் காரணமாக, இங்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்து பொலிவு படுத்திய நிலையில், குடிநீர் வினியோகத்தை ஊராட்சி நிர்வாகம் முறைப்படுத்தாததால் பொது மக்கள் தண்ணீருக்காக தவிக்கின்றனர்.
அரசு பள்ளிக்கும் குடிநீர் வினியோகம் பாதித்துள்ளது. பொதுமக்கள் கூறுகையில்,'குடிநீர் குழாய்கள் மாற்றுவதாக கூறி டெண்டர் விட்டும் உரிய முறையில் பணிகள் நடக்காததால் குடிநீர்க்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் மேலுார் ஊராட்சிக்கு உத்தரவிட வேண்டும்,' என்றனர்.