/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின் உற்பத்திக்காக காமராஜர் சாகர் அணை திறப்பு
/
மின் உற்பத்திக்காக காமராஜர் சாகர் அணை திறப்பு
ADDED : ஏப் 02, 2024 11:25 PM

ஊட்டி:மின் உற்பத்திக்காக காமராஜர் சாகர் அணையிலிருந்து, 5 அடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
நீலகிரியில், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், 12 மின் நிலையங்கள், 13 அணைகள் உள்ளன. இவற்றில், 833. 65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது. கடந்தாண்டில் பருவமழை பொய்த்ததால் அணைகளில் இருந்து தண்ணீர் படிப்படியாக மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதால், டிச., மாதம் நிலவரப்படி, 30 சதவீதம் தண்ணீர் இருப்பில் இருந்தது. நடப்பாண்டில் ஜன., முதல் ஏப்., வரை பெய்ய வேண்டிய கோடை மழையும் பொய்த்தது.
இந்நிலையில், அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் அவ்வப்போது மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாயார், சிங்காரா மின்நிலையங்களில் மின் உற்பத்தி மேற்கொள்ள நேற்று, காமராஜர் சாகர் அணையிலிருந்து, 5 அடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மின் உற்பத்திக்காக நீரோடைகளில் செல்லும் தண்ணீர் கால்நடைகளின் தண்ணீர் தேவையும் பூர்த்தியாகிறது.

