/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வறட்சியால் பசுமை இழந்த நேரு பூங்கா
/
வறட்சியால் பசுமை இழந்த நேரு பூங்கா
ADDED : ஏப் 22, 2024 01:39 AM

கோத்தகிரி;கோத்தகிரி நேரு பூங்கா புல்தரை வறட்சி காரணமாக, பசுமை இழந்து காணப்படுகிறது.
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் நேரு பூங்கா அமைந்துள்ளது. பேரூராட்சி பராமரித்து வரும் இப்பூங்காவில், கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக, காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
நடப்பாண்டு லோக்சபா தேர்தல் காரணமாக, பூங்காவில் காய்கறி கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர்.
பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் நாற்றுகளில் பெரும்பாலான மலர்கள் பூத்துள்ள நிலையில், வறட்சி காரணமாக, புல் தரை பசுமை இழந்து காணப்படுகிறது. இதனால், பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பார்வையாளர்களின் கூட்டமும், வெகுவாக குறைந்துள்ளது.
எனவே, பேரூராட்சி நிர்வாகம், மழை பெய்வதற்கு முன்பு, புல் தரையில் தண்ணீர் பாய்ச்சி, பசுமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

