/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாரியம்மன் கோவிலில் திருட்டு :குற்றவாளி சிறையில் அடைப்பு
/
மாரியம்மன் கோவிலில் திருட்டு :குற்றவாளி சிறையில் அடைப்பு
மாரியம்மன் கோவிலில் திருட்டு :குற்றவாளி சிறையில் அடைப்பு
மாரியம்மன் கோவிலில் திருட்டு :குற்றவாளி சிறையில் அடைப்பு
ADDED : ஆக 27, 2024 01:48 AM

குன்னுார்;கொலக்கம்பை அருகே மாரியம்மன் கோவிலில் நகைகள் மற்றும் உண்டியல் உடைத்து திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
குன்னுார் கொலக்கம்பை அருகே, கெரடாலீஸ் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில், கடந்த, 16ம் தேதி பூட்டு மற்றும் உண்டியல் உடைத்து, ஒன்றரை பவுன் தங்க நகைகள், உண்டியல் பணம் திருடப்பட்டதாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. கொலக்கம்பை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். டி.எஸ்.பி.,குமார் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் பொன்னானியை சேர்ந்த வெள்ளையப்பன், 48, கொலக்கம்பை கோவிலில் திருடியதை ஒப்புக்கொண்டதால் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், குன்னுார் கிளை சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே, இவர் மீது கொலக்கம்பையில் திருட்டு வழக்குகள் உள்ளதும், பொன்னானி சென்று, கூலி வேலை செய்து மீண்டும் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.