/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜன., முதல் மே 20 வரை பெய்துள்ள மழை அளவு குறைவு!: பருவமழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
/
ஜன., முதல் மே 20 வரை பெய்துள்ள மழை அளவு குறைவு!: பருவமழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
ஜன., முதல் மே 20 வரை பெய்துள்ள மழை அளவு குறைவு!: பருவமழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
ஜன., முதல் மே 20 வரை பெய்துள்ள மழை அளவு குறைவு!: பருவமழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
UPDATED : மே 23, 2024 10:26 AM
ADDED : மே 23, 2024 04:45 AM

ஊட்டி,: நீலகிரியில் ஜன., முதல் மே 20 வரை, 21 செ.மீ., வரை மழை பெய்துள்ள நிலையில், தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்து கிடக்கின்றனர்.
நீலகிரியில் நடப்பாண்டு கோடைமழை மிகவும் தாமதமாக, மே, 4ம் தேதி துவங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஏப்., இறுதி வரை கோடை மழை பெய்யாததால் மலை காய்கறி, தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டது. விவசாய நிலங்களை தயார்படுத்திய விவசாயிகள் விதைப்பு பணி மேற்கொள்ள முடியாமல் தவித்தனர்.
நீராதாரங்கள் வற்றியதால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. மின் உற்பத்திக்கு பயன்படும் அணைகள் அனைத்தும் தண்ணீர் அளவு சரிந்தது.
21 செ.மீ., மழை பதிவு
இந்நிலையில், கோடை மழை தாமதமாக துவங்கினாலும், கடந்த இரு வாரங்களில் மாவட்ட முழுவதும் சராசரியாக, 21 செ.மீ., மழை பெய்துள்ளது.
மழைக்கு நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் அணைகளான அப்பர் பவானி, குந்தா, கெத்தை, எமரால்டு, அவலாஞ்சி, பைக்காரா, போர்த்தி மந்து உள்ளிட்ட அணைகளில், நேற்று மாலை, 5:00 மணி நிலவரப்படி, சராசரியாக வினாடிக்கு , 100 முதல் 150 கன அடி நீர் வரத்து வருகிறது. 12 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கூடலுார் மற்றும் நெல்லியாளம் ஆகிய நான்கு நகராட்சிகள், 11 பேரூராட்சி, 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. 500 க்கும் மேற்பட்ட குடிநீர் ஆதார பகுதிகள் உள்ளன. மழையால் தொடர்வதால் மாவட்டத்தின் தண்ணீர் தேவை பூர்த்தியாகி வருகிறது.
இரு வாரத்தில் 15 செ.மீ., மழை
பேரிடர் மேலாண்மை தாசில்தார் ரவி கூறுகையில், ''ஒவ்வொரு ஆண்டும் ஜன., மாதம் முதல் மே., வரை கோடை மழை பெய்யவது வழக்கம். அதில், ஜன., 62.27 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. பிப்., மார்ச், ஏப்., ஆகிய மூன்று மாதங்கள் மழை பெய்யவில்லை. மே மாதம், 1ம் தேதி முதல், 20ம் தேதி வரை, 15 செ.மீ.,மழை பெய்துஉள்ளது.
கோடை மழையின் சராசரி அளவு, 30 செ.மீ., இந்த ஐந்து மாதம் காலங்களில், 21 செ.மீ., மழை பூர்த்தியாகியுள்ளது. ஜுன் மாதத்திலிருந்து அக்., மாதம் வரை தென் மேற்கு பருவ மழை காலமாகும். இம்முறை எதிர்பார்த்த மழை பெய்யும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.
பருவ மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
ஊட்டி பகுதியை சேர்ந்த சிறு விவசாயி நஞ்சன் கூறுகையில், '' நீலகிரியில் மே மாதம் பெய்த கோடை மழை மலை காய்கறி விவசாயத்துக்கு ஏதுவாக உள்ளது.
''ஆனால், தேயிலை தோட்டத்தில் உரமிட்டு பராமரிக்கும் அளவுக்கு ஈரப்பதம் இல்லை. அதனை ஈடு செய்ய, தென்மேற்கு பருவ மழை முழுமையாக பெய்தால், பெரும் பயன் ஏற்படும்,'' என்றார்.

