/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பி.இ.எம்.எல்., பங்கு விற்பனையில் ஊழல் பா.ஜ., - காங்., மீது கேரள அமைச்சர் புகார்
/
பி.இ.எம்.எல்., பங்கு விற்பனையில் ஊழல் பா.ஜ., - காங்., மீது கேரள அமைச்சர் புகார்
பி.இ.எம்.எல்., பங்கு விற்பனையில் ஊழல் பா.ஜ., - காங்., மீது கேரள அமைச்சர் புகார்
பி.இ.எம்.எல்., பங்கு விற்பனையில் ஊழல் பா.ஜ., - காங்., மீது கேரள அமைச்சர் புகார்
ADDED : மார் 28, 2024 05:44 AM

பாலக்காடு, : பி.இ.எம்.எல்., நிறுவன பங்கு விற்பனையில், பா.ஜ. மற்றும் காங்கிரஸ் ஊழல் செய்துள்ளது, என, கேரள மாநில கலால் துறை அமைச்சர் ராஜேஷ் தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காட்டில் கலால் துறை அமைச்சர் ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் பத்திரங்கள் மூலம், பா.ஜ. மற்றும் காங்கிரஸ் செய்த ஊழலால் தான், பாலக்காட்டில் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான பி.இ.எம்.எல்., (Bharat Earth Movers Limited) பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்கிய, மேகா இன்ஜினியரிங் இன்பிராஸ்டக்சர் லிமிடெட் (Mega Engineering Infrastructure Ltd) என்ற நிறுவனம், தேர்தல் பாத்திரங்கள் வாயிலாக, 714 கோடி ரூபாய் பா.ஜ.வுக்கும்; 320 கோடி ரூபாய் காங்கிரசுக்கும் அளித்துள்ளது. இதை அந்த நிறுவனமே வெளிப்படையாக தெரிவித்துள்ளது.
மொத்தம், 56,500 கோடி ரூபாய் சொத்துக்கள் கொண்ட, ராணுவத்திற்கு தேவையான பொருட்கள், வாகனங்கள் தயார் செய்யும் இந்த முக்கிய நிறுவனத்தின் பங்குகள், சிறு தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி, பாலக்காடு எம்.பி., உட்பட யாரும் வாய் திறக்காமல் இருப்பதற்கு தேர்தல் பத்திரமும், ஊழலும் தான் காரணம்.
அதேபோல், நெல் கொள்முதலுக்கு மத்திய அரசு, 5 ஆண்டுகளுக்குப் பின், 882 கோடி ரூபாய் அனுமதித்த செய்தி வெளியான நிலையில், மத்திய அரசு இதுவரை நிதி வழங்க வில்லை என்ற மாநில அரசின் வாதம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பொய் பிரசாரம் செய்யும் எதிர்க்கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

