/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் 3,391 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு
/
நீலகிரியில் 3,391 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு
நீலகிரியில் 3,391 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு
நீலகிரியில் 3,391 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு
ADDED : மார் 22, 2024 10:05 PM
ஊட்டி:நீலகிரி லோக்சபா தொகுதியில், மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு, 3,391 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, கம்ப்யூட்டர் மூலம் முதற்கட்ட சீரற்ற மயமாக்கல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 'ஊட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 239 ஓடடுச்சாவடி மையங்கள் மற்றும் கூடுதலாக, 20 சதவீத மையங்களுக்கு, 1,173 ஓட்டுச்சாவடி அலுவலர்கள்.
கூடலுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 224 ஓட்டுச்சாவடி மையங்கள் மற்றும் கூடுதலாக, 20 சதவீத மையங்களுக்கு, 1108 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள்.
குன்னுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 226 மையங்கள் மற்றும் கூடுதலாக 20 சதவீதம் மையங்களுக்கு, 1109 ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள்,' என, மொத்தம், மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட, 3,391 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் நிலை அலுவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவர்களுக்கு, உரிய பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.