/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாக்காளர் பட்டியலில் முறைகேடு; பாலக்காடு பா.ஜ., வேட்பாளர் புகார்
/
வாக்காளர் பட்டியலில் முறைகேடு; பாலக்காடு பா.ஜ., வேட்பாளர் புகார்
வாக்காளர் பட்டியலில் முறைகேடு; பாலக்காடு பா.ஜ., வேட்பாளர் புகார்
வாக்காளர் பட்டியலில் முறைகேடு; பாலக்காடு பா.ஜ., வேட்பாளர் புகார்
ADDED : ஏப் 23, 2024 10:13 PM

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பா.ஜ., வேட்பாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு தொகுதி பா.ஜ., வேட்பாளர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது: பாலக்காடு தொகுதி வாக்காளர் பட்டியலில் பரவலாக முறைகேடுகள் நடந்துள்ளன. தொகுதியின் மொத்த வாக்காளர்களான, 13,98,143 பேரில், 3,26,151 பேர் இரட்டை வாக்காளர்கள் உள்ளன. இது பட்டியலில் உள்ள மொத்த வாக்காளர்களில் நான்கில் ஒரு பகுதியாகும். ஆளுங்கட்சிக்கு தெரியாமல் வாக்காளர் பட்டியலில் இவ்வளவு இரட்டை ஓட்டுகள் வராது. அதற்கு அதிகாரிகளும் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் தலையிட்டு முறைகேடுகளுக்கு தீர்வு காண வேண்டும். இது தொடர்பாக, நேற்று தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதாரங்களுடன் நேற்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய தேர்தல் ஆணையரை அணுக உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள, இரட்டை வாக்காளர்கள் பட்டியலை அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

