/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அதிகரிப்பு
/
அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அதிகரிப்பு
ADDED : ஏப் 24, 2024 10:00 PM

அன்னுார்: அன்னுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பறை எட்டிலிருந்து, 11 ஆக அதிகரித்துள்ளது.
அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளி 73 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஏற்கனவே எட்டு ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. நன்கொடையாளர் வாயிலாக மேலும் மூன்று ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்றுமுன்தினம் ஸ்மார்ட் வகுப்பறை, நவீன அறிவியல் ஆய்வுக்கூடம் ஆகியவற்றின் திறப்பு விழா மற்றும் எட்டு கணினிகள் வழங்கும் விழா நடந்தது. இத்துடன் 50 செட் விளையாட்டு உபகரணங்கள் மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டது. விழாவில் ஐ.சி.எஸ்., நிறுவனங்களின் தலைவர் சரண், துணைத்தலைவர் பிரியா ஆகியோர் பள்ளி வளர்ச்சிக்காக, 10 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சோமசுந்தரம், பொருளாளர் நாராயணசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தலைமையாசிரியை சித்ரா பேசுகையில், ஏற்கனவே பள்ளியில் எட்டு ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. தற்போது நன்கொடையாளர்கள் வாயிலாக 11 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு முதல் பிளஸ் ஒன், பிளஸ் டூ ஆகிய பிரிவுகளிலும் தமிழ், ஆங்கிலம் என இரு வழியிலும் கற்பிக்கப்படுகிறது. தற்போது கூடுதலாக எட்டு கணினிகள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் மாணவ, மாணவியர் கூடுதலாக பயன்பெறுவர், என்றார்.
விழாவில், ஈஸ்வர் பொறியியல் கல்லூரி டீன் கருப்பசாமி, முன்னாள் மாணவர் பொன்னுச்சாமி, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

