/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரளா, கர்நாடகாவில் தேர்தல்: சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
/
கேரளா, கர்நாடகாவில் தேர்தல்: சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
கேரளா, கர்நாடகாவில் தேர்தல்: சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
கேரளா, கர்நாடகாவில் தேர்தல்: சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
ADDED : ஏப் 27, 2024 12:34 AM
ஊட்டி;கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்ததை அடுத்து, ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது.
நீலகிரியில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து சில நாட்கள் தப்புவதற்காக, சமவெளி பகுதியில் இருந்து, ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வார இறுதி நாட்களில், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் உட்பட, சமவெளி பகுதியில் இருந்து, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர்.
இதனால், ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மற்றும் ரோஜா பூங்கா உட்பட, சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் லோக்சபா தேர்தல் நேற்று நடந்தது. இதனால், ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது. நகர சாலைகளில் சுற்றுலா வாகனங்கள் குறைந்து, போக்குவரத்து சீராக இருந்தது.

