ADDED : ஏப் 04, 2024 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்;கூடலுார்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம் அதிகளவில் காய்ந்த மூங்கில்கள் உள்ளது. தற்போது, கோடைகாலம் என்பதால், அடிக்கடி வனத்தீ ஏற்பட்டு, மூங்கில்கள் சாம்பலாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று, மதியம், 12:30 மணிக்கு, மாக்கமூலா பகுதியில், மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய மூங்கில் காட்டில் மீண்டும் தீ ஏற்பட்டது. தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் மார்ட்டின் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அப்பகுதிக்கு சென்று தண்ணீர் பாய்ச்சி தீயை கட்டுப்படுத்தினர். எனினும் இரண்டு ஏக்கர் பரப்பளவில் மூங்கில்காடு சாம்பலானது.

