/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூட்டுறவுத்துறை சார்பில் பணியாளர்கள் நாள் நிகழ்ச்சி
/
கூட்டுறவுத்துறை சார்பில் பணியாளர்கள் நாள் நிகழ்ச்சி
கூட்டுறவுத்துறை சார்பில் பணியாளர்கள் நாள் நிகழ்ச்சி
கூட்டுறவுத்துறை சார்பில் பணியாளர்கள் நாள் நிகழ்ச்சி
ADDED : செப் 15, 2024 11:29 PM
ஊட்டி : ஊட்டியில் உள்ள, மாவட்ட கூட்டுறவு வங்கி வளாகத்தில், நீலகிரி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில், பணியாளர்கள் கூட்டம் நடந்தது.
கூட்டுறவு சங்கங்களில் தற்போது பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள், 27 பேர், தங்களது குறைகள் அடங்கிய மனுக்களை, நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் தயாளன், மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர் அய்யனார் ஆகியோரிடம் வழங்கினர்.
'இம்மனுக்கள் மீது, உரிய சட்ட விதிகள், அரசாணைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் சுற்றறிக்கைகளின் படி, இரண்டு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில், சரக துணைப்பதிவாளர் மது, குன்னுார் கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளர் குமாரசுந்தரம், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க துணை பதிவாளர் முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.