/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வறண்டது ரேலியா அணை; குன்னுாரில் குடிநீர் தட்டுப்பாடு
/
வறண்டது ரேலியா அணை; குன்னுாரில் குடிநீர் தட்டுப்பாடு
வறண்டது ரேலியா அணை; குன்னுாரில் குடிநீர் தட்டுப்பாடு
வறண்டது ரேலியா அணை; குன்னுாரில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : ஏப் 23, 2024 10:04 PM

குன்னுார் : குன்னுாரின் குடிநீர் ஆதாரமான ரேலியா அணை வறண்டு வருவதால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 30 வார்டுகளுக்கு, ரேலியா அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், கிரேஸ் ஹில் நிலைய தொட்டிகளில், சுத்திகரிப்பு செய்து, மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், எமரால்டு அணை வறண்டு எமரால்டு கூட்டு குடிநீர் திட்ட நீரும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 43.6 அடி உயரம் கொண்ட ரேலியா அணையில் தண்ணீர், 16 அடி அளவிற்கு மட்டுமே இருப்பு உள்ளது. இந்த நீரும் சேறும் சகதியும் நிரம்பி உள்ளதால், 6 அடி தண்ணீர் மட்டுமே பயன்படுத்த முடியும்.
தற்போதே பாலைவனம் போன்று மாறி அணை வறண்டு வருவதால் மே மாதம் அக்னி துவங்கினால் குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும்.
ஏற்கனவே, 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கிய நிலையில், தற்போது, 10 நாட்களாகியும் குடிநீர் கிடைப்பதில்லை.
தள்ளுவண்டியில் கொண்டு வரப்படும் கிணற்று நீர் ஒரு குடம், 20 ரூபாய் கொடுத்து பலரும் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
எனவே, கரன்சி, ஜிம்கானா தடுப்பணைகளில் பராமரிப்பு இல்லாமல் உள்ள ஜெனரேட்டர், மோட்டார்களை சரி செய்து குடிநீர் வழங்க நகராட்சி நடவடிக்கை எடுப்பது அவசியம்.

