/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எரிந்து சாம்பலாகும் காய்ந்த மூங்கில்கள்; வனச்சூழல் பாதிக்கும் அபாயம்
/
எரிந்து சாம்பலாகும் காய்ந்த மூங்கில்கள்; வனச்சூழல் பாதிக்கும் அபாயம்
எரிந்து சாம்பலாகும் காய்ந்த மூங்கில்கள்; வனச்சூழல் பாதிக்கும் அபாயம்
எரிந்து சாம்பலாகும் காய்ந்த மூங்கில்கள்; வனச்சூழல் பாதிக்கும் அபாயம்
ADDED : ஏப் 03, 2024 10:25 PM

கூடலுார் : கூடலுாரில் காய்ந்த மூங்கில்கள் வனத்தீயால் எரிந்து வரும் நிலையில், வனச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
கூடலுார் பகுதியில், நடப்பாண்டு துவக்கம் முதல் கோடை மழை ஏமாற்றி வருவதால் வனப்பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உணவு தேடி இரவில் குடியிருப்புக்குள் வரும் யானையினால், மனித- யானை மோதல் அதிகரித்துள்ளது. வறட்சியில் வனத்தீயின் தாக்கமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கூடலுார் பகுதியில் காய்ந்த மூங்கில் காடுகளில் அடிக்கடி வனத்தீ ஏற்படுவது அதிகரித்துள்ளது. கூடலுார் மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய தொரப்பள்ளி, மாக்கமூலா வனப் பகுதிகளில் மூங்கில்கள் பெருமளவில் காய்ந்து விட்டன.
இந்நிலையில், அப்பகுதியில் காய்ந்த மூங்கில்கள் அடிக்கடி வனத்தீ ஏற்பட்டு எரிவதால், மூங்கில்களுடன் தாவரங்களும், புதிதாக முளைத்த மூங்கில் செடிகள் தீயில் கருகி அழிந்து வருகிறது.
தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டாலும், தீ ஏற்பட்ட மூங்கில்கள் முழுமையாக எரிந்து சாம்பலாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக வனச் சூழலில் பாதிப்பு ஏற்பட்டு தாவரங்கள், மூங்கில் செடிகள் மீண்டும் முளைப்பதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'வனத்தீயால், அப்பகுதியின் வனச்சூழல் மற்றும் மண்ணின் தன்மை மாறி உள்ளது.
தீயில் பல அரிய வகை தாவரங்கள், மண்ணை வளப்படுத்தக்கூடிய உயிரினங்களும் அழியும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தீயில் எரிந்து அழிந்துவிட்ட தாவரங்கள் மீண்டும் வளரக்கூடிய சூழல் பாதிக்கப்படும்.
எனவே, அப்பகுதியில் மீண்டும் தீ ஏற்படாதவாறு கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும்,' என்றனர்.

