/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திராவிட கட்சி ஆட்சியில் மின்சாரம் இல்லை: வேட்பாளரிடம் கண்ணீர் விட்ட பழங்குடி மக்கள்

ADDED : ஏப் 14, 2024 11:17 PM
பந்தலுார்:பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், பா.ஜ., வேட்பாளர் முருகன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அதில், குந்தலாடி, அய்யன்கொல்லி உள்ளிட்ட சில பகுதிகளில், வேட்பாளரை நேரில் பார்த்த பழங்குடியினர் மற்றும் வயநாடன்செட்டி சமுதாய மக்கள் கூறியாவது:
தி.மு.க.,--அ.தி.மு.க. என இரண்டு திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வந்த போதும்,எங்கள் கிராமங்களில் மின்சார வசதி இல்லாமல் குழந்தைகள் மற்றும் வயோதிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பழங்காலத்தை போல் 'சிம்னி' விளக்கை பயன்படுத்தி வருவதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே இந்த முறை நீங்கள் வெற்றி பெற்று எங்களுக்கு மின் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்,' என கண்ணீருடன் கூறினர்.
அப்போது,வேட்பாளர் முருகன் கூறுகையில், ''நான் வெற்றி பெற்றாலும், வெற்றி பெறாவிட்டாலும் மின் வசதி இல்லாத குடும்பங்களை நேரில் ஆய்வு செய்ய, ஒரு குழு ஏற்படுத்தி, சட்ட சிக்கல்களை தீர்வு கண்டு மின்சார வசதி ஏற்படுத்தி தருவேன்,''என்றார்.
அதனை கேட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்து, அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.