/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம்
/
மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம்
ADDED : ஏப் 28, 2024 09:05 PM
ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில், கோடைகால பயிற்சி முகாம், 15 நாட்கள் நடத்தப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
ஊட்டி எச்.ஏ.டி.பி., விளையாட்டு மைதானத்தில், தடகளம், கூடைப்பந்து மற்றும் கால்பந்து பயிற்சி; குன்னுார் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், ஹாக்கி விளையாட்டுக்கான பயிற்சி ஆகியவை (இன்று) 29ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம், 13ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
இதில், 10 முதல், 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். காலை, 6:00 மணி முதல், 8:00 மணி வரையிலும், மாலை, 4:30 மணி முதல் 6:30 மணி வரையிலும் நடத்தப்படும்.பயிற்சி கட்டணமாக, 200 ரூபாய் ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்படும். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் ஆதார் கார்டுடன் பதிவு செய்யலாம்.
முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். விளையாட்டுக்களின் விபரங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

