ADDED : மார் 29, 2024 08:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:ஊட்டியில் இருந்து ஈரோடுக்கு பத்துக்கும் மேற்பட்ட அரசு பஸ் இயக்கப்படுகிறது.
இந்த பஸ்களை, கல்லாறு மற்றும் பெருமாநல்லுார் பகுதியில் உணவுக்காக சிறிது நேரம் நிறுத்த, போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஆனால், இங்கு பஸ்கள் நிறுத்தாததால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பயணிகள் சிலர் கூறுகையில், 'பல ஆண்டுகளாக பர்லியார், அன்னுார், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் பஸ்கள் நிறுத்தப்பட்டு சென்றதால் பயணிகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்தனர்.
தற்போது, பஸ்களை நிறுத்தாததால், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்கள் பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர்,' என்றனர்.

