/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்த காட்டெருமை
/
கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்த காட்டெருமை
ADDED : ஏப் 14, 2024 09:38 PM
கூடலுார்:கூடலுார் ஓவேலி நீயூஹோப் அருகே, தனியார் ஏலக்காய் தோட்டத்தில், சில தினங்களுக்கு முன், கழுத்தில் காயத்துடன் காட்டெருமை இறந்து கிடந்தது. உதவி வன பாதுகாவலர் கருப்பையா, வனச்சரகர் ராதாகிருஷ்ணன் மற்றும் வன ஊழியர்கள், அப்பகுதிக்கு சென்று அதன் உடலை ஆய்வு செய்தனர்.
காட்டெருமை கழுத்தில் காயம் ஏற்பட்டுஇறந்து கிடப்பது தெரியவந்தது. ஓவேலி அரசு கால்நடை டாக்டர் நந்தினி அதன் உடலை பிரேத பரிசோதனை செய்தார். வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த ஆண் காட்டெருமைக்கு, 6 வயது இருக்கும். அதன் கழுத்தில் காயத்துடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்துள்ளது. உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுக்கு பின்பு இறப்புக்கான காரணம் தெரிய வரும். எனினும், கழுத்தில் காயம் இருப்பதால், வேட்டை கும்பல் கைவரிசையா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,' என்றனர்.
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'இப்பகுதியில் ஏற்கனவே, ஜன.,யில் வேட்டை கும்பல் துப்பாகியில் சுட்டதில் காட்டெருமை இறந்தது. அதே பகுதியில், கழுத்தில் வெட்டு காயத்துடன் காட்டெருமை உயிரிழந்திருப்பது, வேட்டை கும்பலின் கைவரிசையாக இருக்கவும் வாய்ப்புள்ளது.
வனத்துறையினர், இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்,'என்றனர்.

